லெஸ்பியன் உறவிற்கு எதிர்ப்பு: இரு பெண்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

வெள்ளி, 18 செப்டம்பர் 2015 (12:04 IST)
லெஸ்பியன்' உறவுக்கு, கணவர் எதிர்ப்பு தெரிவித்ததால், சேலம் அருகே இளம் பெண்கள் இருவரும், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.


 

 
சேலம், தின்னப்பட்டி அருகே ரயில்வே தண்டவாளத்தில், இரு இளம்பெண்களின் சடலம் இருப்பதாக நேற்று, சேலம் ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவல் அடிப்படையில் போலீஸார் விரைந்து சென்று இரு பெண்களின் சடலத்தை கைப்பற்றி, பிரே பரிசோதணைகாக சேலம் அரசு மருத்துவமனைக்கு சடலத்தை, அனுப்பி வைத்தனர்.
 
இது குறித்து ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தியதில், சேலம் அருகே அன்னதானப்பட்டியில், காயத்ரி வீட்டின் அருகே  ஜான்சிராணி குடும்பத்தார் 7 ஆண்டுக்கு முன் குடியேறிய இருந்தனர், அப்போது, காயத்ரியும்,ஜான்சிராணி இடையே இணைப்பிரியா தோழிகளாக இருந்துள்ளனர். மேலும், இரவு நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் இவர்கள் ஒன்றாகவே இருந்து வந்துள்ளனர். கடந்த ஆண்டு, ஜான்சிராணிக்கு, தங்கதுரை என்பவருடன், திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின், இவர்களுடைய நட்பு மேலும் அதிகமானது. இந்நிலையில் இருவரும் தினமும் காலையில், வீட்டைவிட்டு வெளியேறி சென்று, மாலையில் வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஜான்சிராணி, நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த கணவர் 'அவளுடன் பேசக்கூடாது,சந்திக்கவும் கூடாது' என, கண்டித்துள்ளார்.
 
இதே போல் காயத்திரி பெற்றோரும் கண்டித்துள்ளனர். ஆனால் ஜான்சிராணியும், காயத்திரியும் மாற்றி கொள்ளவில்லை. இதனால் விரக்திடைந்த தோழிகள் கடந்த, 16ஆம் தேதி இருவரும், ஒகேனக்கல் சென்று வீடு திரும்பும் போது, நேற்று முன்தினம் இரவு, தின்னப்பட்டிக்கு அருகே, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 
 
இருவரும், லெஸ்பியன் செக்ஸ் உறவு வைத்திருப்பதை கண்டித்ததால் தான் தற்கொலை செய்து கொண்டனர் என்று இரு வீட்டார் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
 
ஆனால், அதை உறுதிப்படுத்த சரியான ஆதரங்கள் இல்லை என்பதால் தற்கொலை செய்து கொண்ட தோழிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்