எடுத்துக்கிட்ட நேரமே போதும்; இடஒதுக்கீட்டை குடுங்க! – எல்.முருகன் கோரிக்கை

ஞாயிறு, 25 அக்டோபர் 2020 (13:50 IST)
அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில் விரைவில் ஆளுனர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஆளுனர் ஒப்புதல் அளிக்கப்படாமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆளுனர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் “அரசு பள்ளி மாணவ்ர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க ஏற்படுத்தப்பட்ட தீர்மானத்தின் மீது ஆளுனர் தரப்பில் அதிகமாகவே நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டது. எனவே இனியும் தாமதிக்காமல் ஆளுனர் ஒப்புதல் வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்