இனி எப்ப வேணாலும் அருவியில் குளிக்கலாம்! – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (15:33 IST)
குற்றாலத்தில் உள்ள அருவிகளில் இனி 24 மணி நேரமும் குளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

கொரோனா காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் நிலவி வரும் நிலையில் சுற்றுலா தளங்களிலும் கட்டுப்பாடுகள் தொடர்ந்து வந்தது. இதனால் குற்றாலம் அருவி கடந்த சில மாதங்கள் முன்னதாக சுற்றுலா பயணிகளுக்காக கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டது.

அதன்படி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது கோடைக்காலம் காரணமாக அருவிகளுக்கு குளிக்க வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனால் குற்றாலம் அருவிகளில் நேற்று முதலாக 24 மணி நேரமும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்