சீரடி சாய்பாபா ஆலயத்தில் பெண்கள் கலந்து கொண்ட குத்துவிளக்கு பூஜை.

சனி, 6 ஆகஸ்ட் 2022 (22:19 IST)
கரூரில் உலக நன்மை வேண்டியும் நோய் நொடியில்லாமல் மக்கள் வாழ வேண்டி அருள்மிகு ஸ்ரீ சத்ய ஜோதி சீரடி சாய்பாபா ஆலயத்தில் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்ட குத்துவிளக்கு பூஜை.
 
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, வெங்கமேடு விவிஜி நகர் பகுதியில் வீற்று அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ சத்ய ஜோதி சீரடி ஸ்ரீ சாய்பாபா ஆலயத்தில் மாபெரும் குத்துவிளக்கு பூஜை 3 ம் ஆடி வெள்ளியை முன்னிட்டும், வரலெட்சுமி விரத்தினை முன்னிட்டும் நடைபெற்றது.

முன்னதாக ஆலயத்தில் மூலவர் ஸ்ரீ சாய்பாபாவிற்கு விஷேச அலங்காரங்களும் மஹா தீபாராதனைகளும் தொடர்ந்து ஆலயத்தின் அர்ச்சகர் சிவஹர்சன், அலங்கரிக்கப்பட்ட மகாலெட்சுமி அம்மனை கலசம் போல் பாவித்து விஷேச சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

பெண் பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த, குத்துவிளக்குகளுக்கு தீபம் ஏற்றி, அவற்றிற்கு லலிதா சகஸ்ஹர நாமம் வாசித்து இனிதே குத்துவிளக்கு பூஜைகள் நிறைவு பெற்றது. இதற்கான முழு ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினர் மற்றும் வெங்கமேடு விவிஜி நகர் சீரடி சாய்பாபா டிரஸ்ட் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்