பிரச்சாரத்தை துவங்கிய குஷ்பூ!!

வெள்ளி, 19 மார்ச் 2021 (17:11 IST)
ஆயிரம் விளக்கு தொகுதியின் பாஜக வேட்பாளர் குஷ்பூ சுந்தர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

 
ஆயிரம்விளக்கு தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் குஷ்பு சுந்தர் தனது பிரச்சாரத்தை பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகமான கமலாலயத்தில் இருந்து தொடங்கினார். முன்னதாக கமலாலயத்திற்கு உள்ளே சென்று அங்குள்ள பாரத மாதாவின் சிலையை வணங்கினார்.
 
தி.நகர் பகுதி தணிகாசலம் ரோடு, வெங்கட்நாராயன ரோடு, போக் ரோடு, ஹிந்தி பிரச்சார சபா, பிரேம் காலனி, போன்ற பகுதிகளில் திறந்த வேனில் தாமரை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார்.
 
வாக்கு சேகரிப்பின் போது பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் கரு நாகராஜன், சேகர், கிரி, பத்ரி ஆகியோரும் அண்ணா திமுக, பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மற்றும் இதர கூட்டணி கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்