காவிரி வெள்ளப்பெருக்கு: குளித்தலையில் கருணாநிதியால் கட்டப்பட்ட பாலத்திற்கு ஆபத்தா ?

திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (13:01 IST)
கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியில், குளித்தலை டூ முசிறி பகுதிகளை  இணைக்கும் காவிரி ஆற்றில், தந்தை பெரியார் பாலம் உள்ளது. கடந்த 1971 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டப்பட்ட இந்த  பாலம் தற்போது கடந்த சில தினங்களாக வந்த காவிரி ஆற்றின் வெள்ளப்பெருக்கினாலும், இப்பகுதியில் ஏற்கனவே மணல் அள்ளியதினாலும், தற்போதும், பாலத்தின் அருகே திருட்டுத்தனமாக மணல் அள்ளி வருவதாலும் இந்த பாலம் தற்போது அரிப்பெடுத்து, அஸ்திவாரம் தெரியும் அளவிற்கு வெளி வந்துள்ளது. கனரக வாகனங்கள் செல்லும் போது, இப்பாலம் அதிர்வது எதற்காக அதிர்கின்றது என்று தெரியாத வண்ணம் இரு சக்கர வாகன ஒட்டிகள் பெருமளவில் அச்சப்படுவதாகவும் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



மேலும், ஆபத்தான இந்த பாலத்தினை பொதுமக்கள் பயன்படுத்தி வருவதினாலும், ஏற்கனவே இந்த பாலத்தினை தாண்டி உள்ள முக்கொம்பு பாலம் இதே போல தான் முக்கொம்பு பாலம் மற்றும் தடுப்பணை உடைந்த நிலையில் அதே நிலை ஏற்படாமல் பொதுப்பணித்துறை ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்கின்றனர்.

வீடியோவை காண


சி.ஆனந்தகுமார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்