வெடி வைத்த அமமுக.. சட்டசபையில் அடி வைக்குமா? – குழப்பத்தில் கோவில்பட்டி நிலவரம்!

ஞாயிறு, 2 மே 2021 (11:53 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் கோவில்பட்டி தொகுதியில் அமமுக – அதிமுக இடையே இழுபறி நீடிக்கிறது.

தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. 234 தொகுதிகளில் அதிமுக, திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் உட்பட சுயெட்சை வேட்பாளர்களையும் சேர்த்து மொத்தமாக 3,998 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இந்நிலையில் இன்று தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில் கோவில்பட்டி தொகுதியில் அமமுக – அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. அதிமுக சார்பில் அத்தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிட்ட நிலையில், அமமுக சார்பில் டிடிவி தினகரன் போட்டியிட்டார். தேர்தல் பரப்புரையின்போது அமமுகவினர் அமைச்சர் கடம்பூர் ராஜூ கார் அருகே பட்டாசு வெடித்தது இரு கட்சியினர் இடையே மோதலை கிளப்பியிருந்தது.

இந்நிலையில் தற்போது கோவில்பட்டி வாக்கு எண்ணிக்கையில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் அமமுக – அதிமுக இடையே இழுபறி நீடித்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்