கொடநாடு கொலை வழக்கு; சசிகலா குடும்பத்தை சேர்ந்த அந்த நபருக்கு தொடர்பா?

வெள்ளி, 28 ஏப்ரல் 2017 (10:07 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடுநாடு எஸ்டேட் பங்களாவில் காவலில் ஈடுபட்ட காவலாளி ஓம் பகதூர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட  வழக்கில் சசிகலா குடும்பத்துக்கு தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நகர்வதாக தகவல்கள் வருகின்றன.


 
 
காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டதுமில்லாமல் ஜெயலலிதா, சசிகலா அறை கதவுகள் உடைக்கப்பட்டு ஆவணங்கள் எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனால் இந்த கொலைக்கான காரணத்தை தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர் காவல்துறையினர்.
 
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மற்றொரு காவலாளி கிருஷ்ணா பகதூரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. எஸ்டேட்டை பற்றி நன்கு அறிந்தவர்கள்தான் உள்ளே சென்று சரியான அறைக்கு போக முடியும்.
 
மேலும் எஸ்டேட்டு பங்களாவிற்குள்ளும், போயஸ் கார்டனிலும் புகை பிடிக்கும் ஒரே நபர் ராவணன் மட்டும்தான் போன்ற பல முக்கிய விஷயங்களை எஸ்டேட் மேனேஜர் காவல்துறையிடம் கூறியுள்ளதாக பேசப்படுகிறது. இதனால் இந்த வழக்கில் சசிகலா குடும்பத்துக்கு தொடர்பு இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
 
மேலும் இந்த கொலை வழக்கை மத்திய அதிகாரிகளும் கவனித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரன் இந்த வழக்கில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்