147 குடும்பங்களுக்கு 450 இலவச கபாலி டிக்கெட்: கிரண் பேடி அதிரடி

வெள்ளி, 22 ஜூலை 2016 (08:22 IST)
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி புதுச்சேரியில், ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் மூலம் இலவசமாக கழிப்பறை கட்டுபவர்களுக்கு கபாலி டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.


 
 
கபாலி திரைப்படம் இன்று அதிகாலை வெளியானதையொட்டி அவர் அளித்த வாக்குறுதியின் படி கபாலி டிக்கெட்டுகளை இலவசமாக வழங்க முடிவெடுத்துள்ளார்.
 
புதுச்சேரி மாநிலத்தின் ‘சுத்தமான செழிப்புமிக்க புதுச்சேரி’ திட்டத்துக்கு விளம்பர தூதராக வரவேண்டும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதனையடுத்து இலவசமாக கழிப்பறை கட்டுபவர்களுக்கு கபாலி டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
 
அவரது அறிவிப்பை ஏற்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 147 குடும்பங்களில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, 147 குடும்பங்களில் ஒரு குடும்பத்துக்கு 3 டிக்கெட் வீதம் கிட்டத்தட்ட 450 டிக்கெட்டுகளை கபாலி படத்திற்காக முன்பதிவு செய்துள்ளார் கிரண் பேடி.
 
இதற்காக ஆன மொத்த செலவுகளையும் தானே மொத்தமாக ஏற்றுக்கொள்வதாகவும் அறிவித்திருந்த நிலையில், முதல் கட்டமாக ரூ.5000 பணத்தை வழங்கயிருக்கிறார் புதுச்சேரியின் அதிரடி ஆளுநர் கிரண் பேடி. நெருப்புடா......
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்