தமிழில் டுவிட்: முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய கேரள முதல்வர்!

செவ்வாய், 1 மார்ச் 2022 (09:01 IST)
தமிழில் டுவிட்: முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய கேரள முதல்வர்!
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு அரசியல் தலைவர்கள் திரையுலக பிரபலங்கள் தொழிலதிபர்கள் உள்பட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் இன்று தனது பிறந்தநாளை அடுத்து அண்ணா கலைஞர் சமாதிகளுக்கு சென்று அவர் மலர் மரியாதை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து பதிவு செய்திருப்பது:
 
இன்று பிறந்தநாள் கொண்டாடும் தோழர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தினேன். வரலாற்றுச் சிறப்புமிக்க கேரள-தமிழக உறவினை மேலும் வலுப்படுத்தவும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதியளித்திருக்கும் உயர்ந்த கொள்கைகளுக்காக அவர் தொடர்ந்து போராடவும் வாழ்த்துகிறேன்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்