எழுந்து வா தலைவா’: விண்ணை பிளந்த தொண்டர்களின் கோஷங்கள்

Webdunia
திங்கள், 6 ஆகஸ்ட் 2018 (20:00 IST)
சென்னை காவேரி மருத்துவமனையில் கடந்த பத்து நாட்களாக சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக சற்றுமுன் காவேரி மருத்துவமனையில் அறிக்கை வெளியானதால் திமுக தொண்டர்கள் மருத்துவமனையின் முன் கவலையுடன் குவிய தொடங்கிவிட்டனர்.
 
தலைவர் விரைவில் எழுந்து வர வேண்டும் என்ற வகையில் 'எழுந்து வா தலைவா’ என்ற கோஷத்தை அவர்கள் எழுப்பி வருகின்றனர். தொண்டர்களின் விண்ணை பிளக்கும் ஆக்ரோஷமான கோஷத்தால் காவேரி மருத்துவமனை இருக்கும் ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் காவேரி மருத்துவமனைக்கு சற்றுமுன் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து, டி.ஆர்.பாலு ஆகியோர் வருகை தந்துள்ளனர். இன்னும் பல விஐபிக்கள் காவேரி மருத்துவமனைக்கு வருகை தரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் ஆழ்வார்ப்பேட்டை பகுதி முழுவதிலும் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்