மதுரை சம்பவம்: அதிரடியாக டுவீட் போட்ட கஸ்தூரி: குவியும் பாராட்டுக்கள்!!!

திங்கள், 22 ஏப்ரல் 2019 (09:30 IST)
மதுரையில் வாக்குப்பதிவு ஆவணங்கள் அறைக்கு சென்ற பெண் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து நடிகை கஸ்தூரி டிவீட் போட்டுள்ளார்.
 
கடந்த 20ந் தேதி  மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு ஆவணங்களை மர்ம நபர் ஒருவர் எடுத்து சென்று நகல் எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை, சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்திற்கு முன் குவிந்தனர்.
 
இதுகுறித்து மதுரை மக்களவை தொகுதி கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் மதுரை ஆட்சி தலைவர் நடராஜன் அவர்களிடம் புகார் கொடுத்தார்.
பின்னர் அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் கலால் வட்டாட்சியர் சம்பூர்ணம் அந்த அறைக்குள் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பெண் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
 
இந்நிலையில் இதுகுறித்து கஸ்தூரி தனது டிவிட்டரில் இந்த சம்பவத்தில் கடைசியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நல்லவேலையாக அங்கு பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா வேலை செய்து கொண்டிருந்ததால் குற்றம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவே சென்னையில் மருத்துவமனையில் ஆகட்டும் சரி, ஜெயிலிலாகட்டும் சரி சிசிடிவி கேமரா ஒர்க் செய்யாது என டுவீட் செய்துள்ளார்.
 
இதனைபார்த்த ரசிகர்கள் உங்களின் இந்த தைரியத்தை பாராட்டுகிறோம் என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
 

So finally Some action has been taken. Glad to note that CCTV was working in madurai . In chennai, be it a jail or a hospital, CCTVs never work.#madurai #tahsildar #sampoornam #election #CodeViolation pic.twitter.com/gE3Ew8aueX

— Kasturi Shankar (@KasthuriShankar) April 21, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்