கரூர் மதிமுக மாவட்டச் செயலாளர் பரணி மணி நீக்கம் - வைகோ அதிரடி

புதன், 23 செப்டம்பர் 2015 (06:55 IST)
மதிமுக கரூர் மாவட்டச் செயலாளர் பரணி மணியை அப்பொறுப்பில் இருந்து அதிரடியாக  நீக்கப்பட்டார்.
 

 
கடந்த சில நாட்களாக மதிமுகவிலிருந்து அதன் முன்னணி தலைவர்கள் சிலர் வெளியேறினர். மேலும், சில முக்கிய நிர்வாகிகளை வைகோவே வெளியிற்றி வருகின்றார்.
 
இந்த நிலையில், புதுச்சேரி மாநில, மதிமுக பொறுப்புக் குழு தலைவராக இருந்த ஹேமா பாண்டுரங்கனை, நேற்று முன்தினம் கட்சியில் இருந்து வைகோ நீக்கினார்.
 
இந்த அறிவிப்பு வெளியான நிலையில், கரூர் மாவட்ட செயலாளர் பரணி மணியை கட்சியில் இருந்து நீக்கினார். பரணி மணி, திமுகவினருடன் நெருக்கமாக இருப்பதாலும், அவர் திமுகவிற்கு செல்லக் கூடும் என்ற தகவல் கிடைத்ததை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
 
இதனால், ஆவேசம் அடைந்த பரணி மணி, மதிமுக துவக்கியது முதலே தாம் கட்சிப் பணியாற்றிவருவதாகவும், சமீப காலமாக, வைகோ தவறான முடிவுகளை எடுத்து வருவதாகவும், அவர் தனது நிலையை மாற்றிமாற்றி பேசுவதாகவும், நிலையான  செயல்பாடு இன்றி வைகோ தடுமாறுவதாகவும் குற்றம் சாட்டினார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்