காவிரி ஆற்றில் மூழ்கி கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் இருவர் பலி

புதன், 13 ஏப்ரல் 2016 (19:08 IST)
கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க கரூர் அருகே உள்ள தாந்தோன்றிமலை அரசுக கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் 5 பேர், மாயனூரில் உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கதவணைக்கு குளிக்க சென்றுள்ளனர்.


 


இந்நிலையில், குளிக்க சென்ற சண்முகம் (வயது 18), தாமரைச்செல்வன் (வயது 18), ஆகிய இரு மாணவர்கள் காவிரி நீரில் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் பலியாகியுள்ளனர்.

மேலும் மற்ற மூன்று மாணவர்கள் பத்திரமாக கரை திரும்பியுள்ளனர். உயிரிழந்த மாணவர்களின் பிரேதங்களை தேடும் பணி சுமார் 2 மணி நேரமாக நீடிக்கும் வேளையில் கரூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக உடல் அனுப்பி வைக்கப்படும்.

மேலும் இந்த சோக நிகழ்ச்சி அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆங்காங்கே தோண்டப்படும் ஆற்று மணல் கொள்ளையால்தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சமூக நல ஆர்வலர்களும், பொதுநல ஆர்வலர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கரூர் மாவட்டம், மாயனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்