பால் பண்ணை அதிபரை கடத்த முயற்சி ; 29 பேர் கைது : கரூரில் பரபரப்பு

வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (12:42 IST)
கரூர் அருகே தனியார் பால்பண்ணை அதிபரை கடத்த முயற்சி செய்த வழக்கில் இதுவரை 29 பேரை கைது செய்த போலீஸார் – கடத்தலுக்கு மூலக்காரணமாக இருந்த 4 பேரை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


 
கரூர் மாவட்டம், மாயனூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட வீரராக்கியம் பகுதியை சார்ந்த சாமியப்பன் என்பவரது வீட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி இரவு, பால் பண்ணை அதிபரை கடத்த முயற்சித்துள்ளனர். 
 
இந்நிலையில் அவர் அங்கு இல்லாத நிலையில் விரக்தியடைந்த கடத்தல் கும்பல் அங்குள்ள வீடு மற்றும் நிறுவனங்களில் பணிபுரிந்த வாட்ச்மேன்களை கடத்தி சென்றனர்.
 
இவர்களை விடுவிக்க பல கோடி கேட்டது தொடர்பாக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணையில் கடத்தப்பட்ட அன்றைய தினமே வாட்ச்மேன்களை உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். 
 
இது சம்பந்தப்பட்ட 29 குற்றவாளிகளை கைது செய்து குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 
 
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடத்தலுக்கு மூலாதரணமாக செயல்பட்ட பணப்பாண்டி மற்றும் ஆண்டவர் என்ற இரு குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் (16-09-16) கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 
 
முக்கியக்குற்றவாளிகளான திண்டுக்கல் மாவட்டம், நம்பிபோட்டை பகுதி, பொன்நகரில் வசிக்கும் பிரவீன் என்கின்ற சீனு (வயது 24), மற்றும், தேனி மாவட்டம், பழனிச்செட்டிப்பட்டி பகுதியை சார்ந்த  பிரித்திவிராஜன் ஆகியோர் இன்று குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.
மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் உத்திரவிற்கிணங்க, அவர்கள்  குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்