மோடி அரசுக்கு கூஜா தூக்கும் எடப்பாடி அரசு: கவரிமான் கருணாஸ் காட்டம்

சனி, 1 டிசம்பர் 2018 (11:03 IST)
தமிழக அரசு மத்திய அரசின் கூஜாவாக செயல்பட்டு வருகிறது என எம்.எல்.ஏ கருணாஸ் காட்டமாக பேசியிருக்கிறார்.
 
புதுக்கோட்டையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கிய கருணாஸ், இலங்கையிலிருந்து அகதியாக வந்தவர்கள் கஜா புயலால் பேரிழப்பை சந்தித்துள்ளார்கள். அவர்களை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. எந்த நிவாரணமும் வழங்கவில்லை. 
 
எடப்பாடி அரசு மோடி அரசுக்கு கூஜாவாக செயல்பட்டு வருகிறது. கேரளாவிற்கு சென்ற மோடி தமிழகத்திற்கு வர முடியாதா? அவருக்கு தமிழகம் மீது அக்கறை இல்லை என காட்டமாக பேசினார்.
 
எது எப்படி இருந்தாலும் ஒரு காலத்தில், கூவத்தூருக்கு ஐடியா கொடுத்து எடப்பாடியார் அரசை ஹாஹா ஹோஹோன்னு புகழ்ந்தவர் தான் இந்த கருணாஸ். இவரின் திடீர் பல்டிக்கு என்ன காரணமோ?

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்