மோடிக்கு கருணாநிதி கோரிக்கை

திங்கள், 30 மே 2016 (09:00 IST)
மீனவர்கள் மற்றும் தலித் கிறிஸ்துவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என பிரமதர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 
இது குறித்து, திமுக தலைவர் கருணாநிதி, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், நரிக்குறவர்கள் உள்ளிட்டவர்களை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க, மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதற்கு திமுக நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
 
அதே போல், மீனவர்களின் பெரும்பாலான வாழ்க்கை, கடலில்தான் கரைகிறது. வெளியுலகமே தெரியாமல் வாழ்ந்து வருகின்றனர். மீனவர்களைப் போன்று, தலித் கிறிஸ்துவர்களும், பழங்குடியினர் போலவே சமூகம், கல்வியில் பின்தங்கியுள்ளனர்.
 
எனவே, மீனவர்கள் மற்றும் தலித் கிறிஸ்துவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்