மதுவிலக்கை அமல்படுத்த புதிய சட்டம்: திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் கருணாநிதி

ஞாயிறு, 10 ஏப்ரல் 2016 (19:56 IST)
வருகிற சட்டசபை தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டார். அதனை பேராசிரியர் அன்பழகன் பெற்றுக்கொண்டார்.


 
 
இந்த தேர்தல் அறிக்கையில், விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி, மதுவிலக்கை அமல்படுத்த புதிய சட்டம் உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியாயின.
 
அதில் உள்ள சில முக்கிய அறிவிப்புகள்:
 
1. விவசாயத்துக்கு தனி பட்ஜட்.
 
2. வேளாண் பொருள்களை சந்தைப்படுத்த புதிய கொள்ளை.
 
3. மகளிருக்கு 9 மாதம் மகப்பேறு கால விடுமுறை.
 
4. ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு 15 நாளில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.
 
5. ஆவின்பால் விலை லிட்டருக்கு ரூ. 7 வரை குறைக்கப்படும்.
 
6. தொடக்கப்பள்ளி சத்துணவுத்திட்டத்தில் பால் சேர்க்கப்படும்.
 
7. லோக் ஆயுக்தா கொண்டு வரப்படும்.
 
8. இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
 
9. அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 54,233 பணியிடங்கள் நிரப்படும்.
 
10. டாஸ்மாக் நிறுவனங்கள் கலைக்கப்படும். ஊழியர்களுக்கு மாற்று பணி வழங்கப்படும்.
 
11. கல்விக்கடன் ரத்து செய்யப்படும்.
 
12. முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை
 
13. முதியோர் உதவித்தொகை ரூ.1,300 ஆக உயர்த்தப்படும்.
 
14. மீனவ சமுதாயம் பழங்குடியினர் பட்டியலில் இணைக்கப்படும்; மீனவர்களுக்கு 5 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்.
 
15. கிரானைட்டை அரசே ஏற்று நடத்தும்.

வெப்துனியாவைப் படிக்கவும்