திமுக தேர்தல் அறிக்கை ரெடி: வருகிற 13-ஆம் தேதி வெளியீடு

புதன், 10 பிப்ரவரி 2016 (11:41 IST)
வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை வருகிற 13-ஆம் தேதி அக் கட்சியின் தலைவர் கருணாநிதி வெளியிடுகிறார்.


 


இந்த குழுவில் கனிமொழி எம்.பி., துணை பொதுச்செயலாளர்கள் வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், டி.கே.எஸ்.இளங்கோவன், தங்கம் தென்னரசு உள்பட 9 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் வணிகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர்களிடம் கருத்து கேட்டு அதன் அடிப்படையில் தேர்தல் அறிக்கையை தயார் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தேர்தல் அறிக்கை வருகிற13ம் தேதி அக் கட்சியின் தலைவர் கருணாநிதி வெளியிடுகிறார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற ரூ.2க்கு ரேசன் அரிசி, இலவச கலர் டிவி உள்ளிட்ட அறிவிப்புகள் பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றனர். அந்த தேர்தல் அறிக்கைதான் அவர்களை ஆட்சி கட்டிலில் அமர வைத்தது என்பது பெரும்பாலானோர் கருத்து. ஆனால் தற்போது இளைஞர்கள் இலவசங்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இலவசங்கள் வேண்டாம்.. அடிப்படை வசதிகளை சரியாக செய்துகொடுத்தாலே போதும் என்பது பலரின் எண்ணமாக உள்ளது.

இந்நிலையில் வருகிற சட்டபேரவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை அனைவரும் ஆவலாக எதிர்பார்த்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்