வீட்டுக்கு வெளியே வந்த கருணாநிதி; தொண்டர்கள் உற்சாகம்

சனி, 23 டிசம்பர் 2017 (14:37 IST)
சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்தின் வாயிலில் தொண்டர்களை கருணாநிதி சந்தித்தார்.

 
2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆர்.ராசா, கனிமொழி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் இன்று காலை சென்னை வந்தடைந்தனர். அவர்களை திமுக செயல் தலைவர் விமான நிலையத்திற்கு நேரில் சென்று அழைத்து வந்தார். திமுக தொண்டர்கள் காலை முதல் குவித்து வருகின்றனர்.
 
கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்தில் கனிமொழி மற்றும் ராசாவை காண திமுக தொண்டனர் குவிந்தனர். இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி தனது இல்லத்தில் வாயிலில் தொண்டர்களை பார்த்து கையசைத்தார். இதனால் தொண்டர்கள் மிகுத்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்