என் மீது அதிக பாசம் கொண்டவர் நா.முத்துக்குமார்: கருணாநிதி இரங்கல்
ஞாயிறு, 14 ஆகஸ்ட் 2016 (20:47 IST)
தமிழ் திரையுலகில் மிக சிறந்த பாடலாசிரியராக திகழ்ந்த நா.முத்துக்குமார் மறைவிற்கு தி.மு.க தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தி.மு.க தலைவர் கருணாநிதி இன்று அவரது முகநூல் பக்கத்தில், 41 வயதிலேயே நா.முத்துக்குமார் மறைந்தது அதிர்ச்சியையும், மிகுந்த வருத்தத்தையும் தருகிறது.
தமிழ் துறையில் தனது பாடல்களால் தனிமுத்திரையை பதித்தவர் நா.முத்துகுமார். என் மீது மிகுந்த பாசமும் கொண்ட தம்பி நா.முத்துக்குமாரின் பிரிவால் வாடும் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.