சண்டாளன் என அழைத்தது கருணாநிதி.! அவதூறு பேச்சின் ஆதித்தாய் தி.மு.க.! பொங்கிய சீமான்..!

Senthil Velan

சனி, 13 ஜூலை 2024 (13:58 IST)
நாகரிக அரசியல், கண்ணிய அரசியல் கற்று கொடுப்பதற்கும், அடுத்தவர்களுக்கு போதிக்கும் தகுதியும், நேர்மையும் தி.மு.கவிற்கு இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
 
சாட்டை துரைமுருகன் கைதுக்கு கண்டனம் தெரிவித்த சீமான், தமிழக அரசை கடுமையாக விமர்சித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து சீமான் பேசியதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். சீமானுக்கு நாவடக்கம் தேவை என்றும் கூறியிருந்தனர்.
 
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், கருணாநிதி தொடர்பான பாட்டுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அந்த பாட்டை பாடி இசையமைத்து வெளியிட்டது அதிமுக என்றும் தெரிவித்தார். ஜெயலலிதா இருக்கும் போது அதிமுக மேடைகளில் அந்த பாட்டு ஒலிபரப்பப்பட்டது என்றும் அன்றைக்கு தி.மு.கவினருக்கு எந்த வருத்தமோ, கோபமோ, இழிவோ ஏதும் தெரியவில்லை என்றும் அவருக்கு கூறினார்.       
 
மேலும் அவதூறு பேசுவது, அசிங்கமான அரசியல் பேசுவது இவற்றின் ஆதித்தாய் தி.மு.க. தான் என விமர்சித்த சீமான், இந்திரா காந்தி, ஜெயலலிதா குறித்து தி.மு.க. அவதூறாக பேசியதாகவும், ஒவ்வொரு தலைவர்களை பற்றி கருணாநிதி விமர்சித்ததாகவும் குறிப்பிட்டார். மற்றவர்களை இழிவாக பேசுவதற்கு தி.மு.க. ஆட்களை வைத்துள்ளது என்றும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, சைதை சாதிக் மாற்று கட்சி பெண்களை இழிவாக பேசுகின்றனர் என்றும் சீமான் குற்றம் சாட்டினார்.

ALSO READ: இரும்பு போர்டு விழுந்து தூய்மை பணியாளர் பலி! சென்னையில் பயங்கரம்.!!
 
நாகரிக அரசியல், கண்ணிய அரசியல் கற்று கொடுப்பதற்கும், அடுத்தவர்களுக்கு போதிக்கும் தகுதியும், நேர்மையும் தி.மு.கவிற்கு இல்லை என்று அவர் தெரிவித்தார். சளுக்கர்கள், சண்டாளர்கள் என்ற வார்த்தைகளை எல்லாம் அதிகம் பயன்படுத்தியவர் கருணாநிதிதான் என்றும் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, சேதுசமுத்திர திட்டத்தை அதிமுக எதிர்த்ததற்காக, அக்கட்சியை சண்டாளன் என்ற வார்த்தையை பயன்படுத்தியதாகவும் சீமான் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்