திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு 10 நாட்களுக்கு மேலாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கருணாநிதி உடல்நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக நேற்று வெளியான மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மருத்துவமனை முன் திரண்டுள்ளனர்.