பாஜகவில் இணைந்தார் கராத்தே தியாகராஜன்!

வியாழன், 11 பிப்ரவரி 2021 (21:30 IST)
பாஜகவில் இணைந்தார் கராத்தே தியாகராஜன்!
கடந்த சில வாரங்களாகவே திரையுலக நட்சத்திரங்களும், மாற்ற கட்சியிலிருந்தும் பாஜகவில் இணைந்து வருவது அதிகரித்து கொண்டே வருகிறது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இன்று காலை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் மற்றும் அவரது மகன் துஷ்யந்த் ஆகிய இருவரும் பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் அவர்களின் தலைமையில் பாஜகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பிரமுகர் கராத்தே தியாகராஜன் இன்று பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியானது. இதனை அடுத்து சற்று முன் சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டு உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொண்டார்
 
ரஜினியின் தீவிர ஆதரவாளரான கராத்தே தியாகராஜன், ரஜினி கட்சி ஆரம்பித்தால் அந்த கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரஜினி அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என அறிவித்ததால் தற்போது அவர் பாஜகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்