காங்கேயம் காளைகளை பாதுகாக்க கோரி நூதனப்போராட்டம்

செவ்வாய், 24 நவம்பர் 2015 (03:51 IST)
உலகப் புகழ் பெற்ற காங்கேயம் காளைகளை பாதுகாக்க கோரி காங்கேயத்தில் நவம்பர் 25 ஆம் தேதி அன்று நூதனப் போராட்டம் நடத்த உள்ளனர்.
 

 
உலகப்புகழ் பெற்ற காங்கேயம் காளைகள், கரிய நிறம், கூர்மையான கொம்புகள், பெரிய திமில்கள் என கம்பீரமான காங்கேயம் காளைகள் ஆகும். மதுரை அலங்காநல்லூர் உள்ளிட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளில், மாடுபிடி வீரர்களால் அடக்கமுடியாத அளவுக்கு மிகவும் வலிமையானவை இந்த காங்கேயம் காளைகள். இந்த ரகமாடுகள் கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 90 சதவிகிம் அழிந்துவிட்டது.
 
இவ்வளவு பெருமைகளைப் பெற்ற காங்கேயம் இன மாடுகள், அதிக பராமரிப்பு, ஆட்கள் பற்றாக்குறை, விவசாயத்தில் இயந்திரங்கள் பயன்பாடு போன்ற காரணங்களால், இப்போது அழிவின் விளிம்பில் உள்ளது.
 
எனவே, இந்த காளைகளை பாதுகாக்க கோரி, காங்கேயத்தில், நவம்பர் 25 ஆம் தேதி அன்று கவன ஈர்ப்பு பச்சை கொடி போராட்டம் நடத்த உள்ளனர் அப்பகுதி பொது மக்கள். 

வெப்துனியாவைப் படிக்கவும்