தமிழ்நாட்டில் கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. பின்னர் உள்ளாட்சி தேர்தலில் தனித்தனியே போட்டியிட்டாலும், குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கே அதிமுகவினர் ஆதரவளித்தனர்.
சமீபத்தில் சினிமா ஸ்டண்ட் மாஸ்டரும் பாஜக நிர்வாகியுமான கனல் கண்ணன் பாஜக கூட்டம் ஒன்றில் பேசியபோது, பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆம் ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் உள்ள பெரியார் சிலையை உடைத்து அகற்றுகின்ற நாள் தான் இந்துக்களில் எழுச்சி நாளாக இருக்கும் என பேசினார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் பலரும் கனல் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வந்தனர். இந்நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அளித்த புகாரில் கனல் கண்ணன் மீது போலீஸார் ஒரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார், தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.