தமிழருக்கு செய்த பெரும் துரோகம் இது! – இந்தியாவின் தீர்மானம் மீது கமல்ஹாசன் தாக்கு!

Webdunia
வியாழன், 25 மார்ச் 2021 (10:30 IST)
இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் குறித்த ஐநாவின் தீர்மானத்திலிருந்து இந்தியா நழுவியது குறித்து கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்று வந்த ஈழப் போர் முடிவுக்கு வந்த நிலையில் இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தில் இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என தமிழ்தேசிய உணர்வாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் வாக்கெடுப்பில் எதிராகவோ, ஆதரவாகவோ வாக்கு அளிக்காமல் இந்தியா வெளியேறியது. மத்திய அரசின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இதுகுறித்து பதிவிட்டுள்ள கமல்ஹாசன் “ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தில் ’இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள்’ குறித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் நழுவி இருக்கிறது இந்திய அரசு. தமிழுக்கும் தமிழர்க்கும் மத்தியஅரசு இதுவரை செய்து வந்த துரோகத்தின் உச்சகட்டம் இது” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்