வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர் கமல் ஜெயலலிதாவுக்கு டுவிட்டர் மூலமாக இரங்கல் தெரிவித்தார். அதில், சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் என கூறியிருந்தார். இவர் இரங்கல் தெரிவித்த இந்த விதமும், வார்த்தையும் தான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு முதல்வராக இருந்து மரணமடைந்தவருக்கு இரங்கல் கூறும் விதமா இது என பலரும் அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர். கமலுக்கு எதிராகவும், அந்த டுவிட்டுக்கு விளக்கம் கொடுத்து அவருக்கு ஆதரவாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.