கமலின் தேர்தல் ப்ளான் என்ன? எந்தெந்த தொகுதிகளில் போட்டி??

Webdunia
புதன், 24 பிப்ரவரி 2021 (08:26 IST)
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இந்த தேர்தலில்  இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டிருப்பதாக தகவல். 

 
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளராக கொண்டு தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. 
 
மக்கள் நீதி மய்யம் சார்பில் கடந்த 21 ஆம் தேதி விருப்பமனு விநியோகம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதனால், தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான சில தினங்களில் தமிழகம் முழுக்க போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் எனவும் கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இந்த தேர்தலில்  இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம், வருகிற சட்டமன்றத் தேர்தலில் வேளச்சேரி, மயிலாப்பூர் ஆகிய தொகுதிகளில் ஏதேனும் ஒன்றிலும் இதனோடு கோவை, மதுரைக்குட்பட்ட ஏதேனும் ஒரு தொகுதியிலும் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டு அதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்