கமல்ஹாசன் பரப்புரை விவரம்.. திமுகவுக்கு ஆதரவாக 11 நாட்கள் பிரச்சாரம்..!

Siva
ஞாயிறு, 24 மார்ச் 2024 (14:15 IST)
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியை கூட வாங்காமல் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசன், திமுக கூட்டணிக்கு வாக்கு சேகரிப்பதற்காக பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் ஆன கமல்ஹாசன் மார்ச் 29ஆம் தேதி ஈரோட்டில் தனது பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். அதனை அடுத்து சேலம், திருச்சிராப்பள்ளி, சிதம்பரம், ஸ்ரீபெரும்புதூர், சென்னை, மதுரை, தூத்துக்குடி, திருப்பூர், கோவை மற்றும் பொள்ளாச்சி ஆகிய இடங்களில் அவர் பிரச்சாரம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மார்ச் 29ஆம் தேதி பிரச்சாரத்தை தொடங்கும் கமல்ஹாசன் ஏப்ரல் 16ஆம் தேதி வரை பிரச்சாரம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஏப்ரல் 17ஆம் தேதி தான் பிரச்சாரத்தின் கடைசி நாள் என்ற நிலையில் அவர் 16ஆம் தேதி உடன் தனது பிரச்சாரத்தை முடித்துக் கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரச்சாரத்தை முடித்துவிட்டு தான் கமல்ஹாசன் ’தக்லைஃப்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்