குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த, சரியான சூழல் இதுதான்: கமல்ஹாசன்

Webdunia
வெள்ளி, 21 ஜூலை 2023 (10:25 IST)
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த இதுதான் சரியான நேரம் என்று நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான  கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்
 
மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக பாலியல் பலாத்காரம் செய்யும் வீடியோ நேற்று வெளியாகி நாட்டையே அதிர வைத்தது.  அனைத்து கட்சியின் தலைவர்களும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று குரல் எழுப்பி வருகின்றனர். நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் எழுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில்  நடிகரும் மக்கள் நீதி மச் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் மணிப்பூரில் அரசியலில் அமைப்பு இயந்திரம் சிதைவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என்றும் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த சரியான சூழல் மணிப்பூரில் நிலவுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்