கலாஷேத்ரா கல்லூரி பருவத்தேர்வு தேதி அறிவிப்பு.. சென்னை திரும்பும் மாணவிகள்..!

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2023 (13:23 IST)
சென்னை கலாஷேத்ரா கல்லூரியின் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து சொந்த ஊர் திரும்பிய கல்லூரி மாணவிகள் சென்னை திரும்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக கடந்த சில நாட்களாக மாணவிகள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் காரணமாக மாநில மகளிர் ஆணையம் விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் மாணவிகள் போராட்டம் காரணமாக ஏப்ரல் ஆறாம் தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாணவிகள் தங்களது சொந்த ஊருக்கு சென்றனர்.
 
இந்த நிலையில் தற்போது கலாஷேத்ரா கல்லூரியில் ஏப்ரல் ஐந்தாம் தேதி பருவத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சொந்த ஊர்களுக்கு சென்ற மாணவிகள் தேர்வு எழுத மீண்டும் சென்னை திரும்புகின்றனர். பருவ தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகும் என கலாஷேத்ரா கல்லூரி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்