14ஆம் தேதி சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு? தயாராகும் சசிகலா?

வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (18:58 IST)
அதிமுக பொதுச் செயலாளர் தமிழகத்தின் அடுத்த முதல்வராக பதவியேற்க தீவிரமாக களமிறங்கி உள்ள நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு வரும் 14ஆம் தேதி வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 



ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக திரும்பியதை அடுத்து யாரை ஆட்சி அமைக்க அழைப்பது? என்ற குழப்பத்தில் உள்ளார் ஆளுநர். சசிகலா ஒருபக்கம் தனக்குதான் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அதரவு உள்ளது என்று ஆளுநரிடம் கூறியுள்ளார்.

மறுபக்கம் ஓ.பி.எஸ், எம்.எல்.ஏ.க்கள் சசிகலா தரப்பினரால் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சுயமாக செயல்பட்டால் சட்டசபையில் நான் எனது பெரும்பான்மையை நீருப்பிப்பேன் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து சசிகலாவின் முதல்வர் பதவிக்கு, சொத்து குவிப்பு வழக்குதான் பெரும் சிக்கலாக உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம் கூறியதாவது:-

ஒருவேளை சசிகலா தகுதியானவர் என மீண்டும் வலியுறுத்தப்பட்டால், சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு வரை ஆளுநரும், சசிகலாவும் காத்திருக்க வேண்டும், என்றார்.

இந்நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு வரும் 14ஆம் தேதி வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே அதன்பின்னர் ஆளுநர் யாரை ஆட்சி அமைக்க அழைப்பது? என்பது குறித்து முடிவெடுப்பார் என்று கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்