இதற்கிடையில் கர்நாடக மாநிலத்தில் ஒரு தமிழ் இளைஞர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் கண்டனத்துக்குரியதாகும். அதன் எதிர் வினையாக, தமிழகத்தில் கன்னட நிறுவனங்கள் தாக்கப்பட்டுள்ளதும் ஏற்க முடியாதது. மாநில நலன்களுக்காக, உரிமைகளுக்காகக் குரல் எழுப்புவது வேறு. இரு மாநிலங்களில் உள்ள அப்பாவி மக்களையும், அவர்களது சொத்துக்களையும் தாக்குவது, நாசப்படுத்துவது, குறுகிய அரசியல் ஆதாயத்துக்காக இப்பிரச்சனையை இரு மாநில மக்களுக்கிடையிலான மோதல்களாக மாற்றுவதும் பிரச்னையைத் தீர்க்க உதவாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.
இரண்டு மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர்ப்பிரச்சனையை, இரண்டு மாநில மக்களுக்கு இடையிலான மோதலாக உருவாகி விடாமல் இரண்டு மாநில மக்களுடைய ஒற்றுமையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் ஜனநாயக இயக்கங்களுக்கு உள்ளது. இரண்டு மாநிலங்களிலும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்பாடாமல் அமைதியை பாதுகாப்பதற்கு தமிழகம், கர்நாடக மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது என்று கூறியுள்ளார்.