கரூர் மாவட்டம் மொஞ்சனூர் அருகேயுள்ள வீரங்காடு பகுதியை சேர்ந்தவர் சாமியப்பன். இவர் மனைவி லட்சுமி (68). இவர் கடந்த 5ம் தேதி கரூர் வையாபுரி நகரில் இருந்து மில் கேட் பகுதிக்கு அரசு பேருந்தில் வந்துள்ளார். அப்போது அவர் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை யாரோ அபகரித்துவிட்டனர். கழுத்தில் தங்கச்சங்கிலி காணாமல் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து கரூர் நகர போலீஸில் அவர் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.