டிடிவி.தினகரன் வீட்டில் 7 கிலோ தங்கம்? ஜாஸ் சினிமாஸில் என்ன??

வெள்ளி, 10 நவம்பர் 2017 (21:15 IST)
நேற்று காலை முதல் சசிகலா மற்றும் தினகரனின் உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் என பலரது வீட்டிலும், அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 


 
 
180-க்கும் மேற்பட்ட இடங்களில் 1800-க்கும் அதிகமான அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஜெயா டிவி அலுவலகம், கொடநாடு எஸ்டேட் அலுவலகம், ஜாஸ் சினிமாஸ், மிடாஸ் மதுபான ஆலை ஆகியனையும் மிஞ்சவில்லை. 
 
சமீபத்தில் நடந்த ரெய்டுகளிலேயே இது தான் மிகப்பெரியது என்று அதிகாரிகள் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. 
 
இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள டிடிவி தினகரன் சகோதரர் பாஸ்கரன் இல்லத்தில் இருந்து 7 கிலோ அளவில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், பல கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்ததற்கான ஆவணங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
அதேபோல், 12 ஸ்கிரீன்கள் உள்ள ஜாஸ் தியேட்டர்களில் நடைபெற்ற சோதனை நிறைவடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், நாளை முதல் வழக்கமாக தியேட்டர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்