முதலமைச்சராகும் சசிகலா?: புதுப்பிக்கப்படும் தலைமைச்செயலக ஜெயலலிதாவின் அறை!

வெள்ளி, 30 டிசம்பர் 2016 (11:13 IST)
அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலா நாளை பொறுப்பேற்க உள்ளார். இதனையடுத்து இன்று மாலை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அவசரமாக கூட்டப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


 
 
இந்த கூட்டத்தில் சசிகலா முதல்வராவது குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல்கள் வருகின்றன. மேலும் தலைமைச்செயலகத்தில் ஜெயலலிதா இருந்த முதல்வர் அறை புதுப்பிக்கபட உள்ளதாக கூறப்படுகிறது.
 
வருடம் தோறும் இந்த புதுப்பிக்கும் பணி இருக்கும் என கூறப்பட்டாலும் இது சசிகலா முதல்வராக பதவியேற்க இருப்பதால் தான் நடைபெறுவதாக ஆளும் கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது. குறிப்பாக சில வாஸ்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
 
சசிகலா பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற 10 நாட்களில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி சசிகலாவை முதலமைச்சராக தேர்ந்தெடுப்பார்கள் எனவும் எப்படியும் ஜனவரி இறுதிக்குள் சசிகலா முதல்வராக ஜெயலலிதா இருந்த முதல்வர் அறையில் அமர்வார் என அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்