தமிழகத்தில் ஆட்சியமைக்க ஜெயலலிதாவுக்கு ஆளுநர் ரோசைய்யா அழைப்பு

வெள்ளி, 22 மே 2015 (10:34 IST)
தமிழகத்தில் ஆட்சியமைக்க அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு தமிழ ஆளுநர் ரோசய்யா அழைப்பு விடுத்தார்.
 
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், இன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம்,  அக் கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது.
 
இதில், முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அதிமுக எம்எல்ஏக்கள்,  தேமுதிக எம்எல்ஏக்கள் 5 பேர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் அதிமுக சட்டப்பேரவைக்குழு தலைவராக ஜெயலலிதா ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
 
இதனையடுத்து, ஆளுநர் மாளிகைக்கு சென்ற முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தனது முதலமைச்சர் பதவி விலகலுக்கான கடிதத்தை கொடுத்தார்.
 
முதலமைச்சர் பதவியிலிருந்து ஓ. பன்னீர்செல்வம் ராஜிநாமா செய்ததால், தமிழகத்தில் ஆட்சியமைக்க அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஆளுநர் ரோசய்யா அழைப்பு விடுத்துள்ளார்.
 
மேலும், புதிய அமைச்சர்களின் பட்டியலை வழங்குமாறு ஜெயலலிதாவை ஆளுநர் ரோசய்யா கேட்டுக் கொண்டார். 

வெப்துனியாவைப் படிக்கவும்