ஜெ. சொத்துக்கள் தமிழக மக்களுக்கே சொந்தம்: பி.எச்.பாண்டியனிடம் பொறுப்பை கொடுத்த ஜெயலலிதா!

செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (12:41 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் அனைத்தும் தமிழக மக்களுக்கே செல்ல வேண்டும் என அவர் விருப்பப்பட்டதாக அதிமுக முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் கூறியுள்ளார்.


 
 
ஜெயலலிதாவின் மரணத்தில் நிலவும் தொடர் சந்தேகங்கள், அவசர அவசரமாக முதல்வராக பதவியேற்க இருக்கும் சசிகலா போன்றவற்றால் தனது மௌனத்தை கலைத்துள்ளார் பி.எச்.பாண்டியன்.
 
சென்னை அண்ணா நகரில் உள்ள தனது வீட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பி.எச்.பாண்டியன், தேர்தலுக்காக ஜெயலலிதாவின் கைரேகையை பெற்றது போல, அவரின் சொத்துக்களை அபகரிக்கவும் கைரேகையை பதிவு செய்திருக்கலாம் என குற்றம் சாட்டினார்.
 
ஆகவே முன்னெச்சரிக்கையாக இருக்க முன்னர் நடந்த ஒரு நிகழ்வை கூறினார். ஜெயலலிதாவுடன் நடந்த ஒரு சட்ட ஆலோசனைக் கூட்டத்தில், ஊடகங்கள் முன்னிலையில் என்னுடைய சொத்துக்கள், என்னுடைய நகைகள் உள்பட நான் சம்பாதித்த அனைத்தும் மக்களுக்கு போய் சேர வேண்டும் என ஜெயலலிதா கூறினார்.
 
அதுவே அவரது உயில், அப்போது என்னை பார்த்த ஜெயலலிதா நீங்கள் இதனை கவனித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி என்னை சாட்சியாக முன்னிறுத்திவிட்டு சென்றுள்ளார் என பி.எச்.பாண்டியன் கூறினார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்