மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 73 வது பிறந்த தின விழா நிகழ்ச்சி தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில், கரூர் மாவட்டத்தில், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணை தலைவர் கவின்ராஜ் ஆலோசனையில் கீழ், கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள சத்யா ஷோ ரூம் முன்புறம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் திருவுருவப்படத்திற்கு கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கரூர் மாவட்ட செயலாளர் அபீஸ் செல்வம் தலைமையில், மாவட்ட தலைவர் பசுபதி செந்தில் மாவட்ட இணை செயலாளர் பவர்வேர்ல்டு அருண், மாவட்ட பொருளாளர் பொன்.வாசு, மாவட்ட இணை செயலாளர்கள் கே.என்.ஆர்.சிவராஜ்,. கேபிள் கதிரேஷ் ஆகியோர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு மலர் மாலை அணிவித்து அனைவரும் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். மேலும், இனிப்புகள் வழங்கி கொண்டாடியதோடு, கரூர் மாவட்ட அதிமுக சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் உள்ள அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய மூன்று திருவுருவச்சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கரூர் மாவட்ட அதிமுக அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், நகர செயலாளர்கள் கரூர் மத்திய நகரம் வை.நெடுஞ்செழியன், வடக்குநகரம் பாண்டியன், தெற்குநகரம் வி.சி.கே.ஜெயராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் தானேஷ் என்கின்ற முத்துக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து இன்று தகவல் தொழில்நுட்ப பிரிவினர் கரூர் மாவட்ட அளவில் மட்டுமில்லாமல், தமிழக அளவில் ஒரு வீடியோ ஒன்றினை வைரலாக்கி வருகின்றனர். அதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீம்ஸ் தகராறில் வாய்த்தகராறு முற்றி ஒரு கும்பலாக திமுகவினர் பயங்கர தாக்குதலில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் 3 பேர் மண்டை உடைக்கப்பட்டு, படுகாயமடைந்தனர். .
அந்த சம்பவம் தொடர்புடைய வீடியோ. அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு வாக்குறுதிகளினை தற்போதைய திமுக எம்.எல்.ஏ வும், கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி ஏமாற்றிய சம்பவத்தினை சுட்டிக்காட்டும் வகையிலும், இதே போல தமிழகம் முழுவதும் திமுக வினரின் புரோட்டோ கடை ஆரம்பித்து பிரியாணி கடை முதல் ப்யூட்டி பார்லர் வரை அவர்கள் செய்த அட்டூழியங்களை ஒரு தொகுப்பாக தோள் உறித்து காட்டியது போல், கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவினர் தீவிரமாக வேலை செய்து தற்போது வைரலாக்கி வருகின்றனர். இது ஜெயல்லிதாவின் பிறந்த நாள் அன்றே வர இருக்கும் தேர்தலுக்கு அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் அச்சாரம் போட்டுவிட்டதாகவும், தேர்தலுக்கு முந்தியுள்ளனர் என்றே கூறலாம் என்றும் நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.