தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆறாவது முறையாக முதல்வர் பதவி ஏற்கும் விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டுவிழா அரங்கில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.
பதவியேற்பு விழாவின் போது மேடையில் அமைச்சர்கள் மற்றும் வேறு யாரும் தனது காலில் விழக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா அதிரடி உத்தரவிட்டாராம். இதனால் தான் அந்த விழாவில் அமைச்சர்கள் யாரும் அவரது காலில் விழவில்லையாம். இதையும் மீறியும் அமைச்சர் செல்லூர் ராஜு முதல்வர் ஜெயலலிதா காலில் விழுந்ததால் அவர் மீது முதல்வர் ஜெயலலிதா கடும் கோபத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.