’இதை உருவாக்கி நடைமுறை படுத்தியவர் அம்மா தான்’ - அமைச்சர் விஜயபாஸ்கர்

திங்கள், 1 ஆகஸ்ட் 2016 (23:39 IST)
நோயாளிகள் அதிகளவில் அரசு மருத்துவமனையை நோக்கி வரும் காலமாக உருவாக்கி கொடுத்து அதை நடைமுறை படுத்தியவர் முதல்வர் அம்மா என்று மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
 

 
விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 3 நாள் நடந்த மருத்துவ கண்காட்சியின் நிறைவு விழா கல்லூரி கலையரங்கத்தில் நடந்தது. இதில் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.
 
அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், ”நலவாழ்வுத் துறையில் ஒரு முன்னோடி மாநிலமாக தமிழகத்தை உயர்த்தி தமது இலக்கை நோக்கி சென்று கொண்டிருப்பது மிகப்பெரிய சாதனையாகும். சுகாதார துறையில் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடாமல் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
 
இந்தியாவில் நம் மாநிலத்தை சுகாதாரத்துறையில் முன்மாதிரியான மாநிலம் என்று உலக சுகாதார துறை சொல்லும் அளவிற்கு தற்போது உள்ளது.
 
நமது முதல்வர். காப்பீடு திட்டத்தில் பல்லாயிரம் பொது மக்கள் பயனடைந்து வருகின்றனர். சுகாதார துறையில் பல்வேறு பயனுள்ள திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார்.
 
நோயாளிகள் அதிகளவில் அரசு மருத்துவமனையை நோக்கி வரும் காலமாக உருவாக்கி கொடுத்து அதை நடைமுறை படுத்தியவர் முதல்வர் அம்மாதான்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்