ஓ.பி.எஸ். தான் என்னுடைய அரசியல் வாரிசு: அன்றே சுட்டிகாட்டிய ஜெயலலிதா!! (வீடியோ)

புதன், 8 பிப்ரவரி 2017 (12:20 IST)
அரசியலில் உயர் பதவி பெறுவதற்கு, ஓபிஎஸ் போன்று உழைக்க வேண்டும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா நெகிழ்ச்சியுடன் பேசிய வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.


 
 
கடந்த 2001ம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைத்தது. ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே சிறுதாவூர் நில அபகரிப்பு வழக்கின் தீர்ப்பு காரணமாக, ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்தார்.
 
அப்போது, ஓ.பன்னீர்செல்வத்தை தற்காலிக முதல்வராக, ஜெயலலிதா நியமித்தார். இதன்பின்னர் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஜெயலலிதா பங்கேற்றுப் பேசினார். 
 
அதில், முதல்வராக நியமிக்கப்பட்ட பின்னரும், ஒருவர் தனது தலைமைக்கு விசுவாசமாக இருப்பார் என எதிர்பார்க்க முடியாது. ஆனால், ஓ.பன்னீர்செல்வம், என்னிடம் இதுவரை எந்த எதிர்ப்பும் கூறவில்லை. எனது பாணியிலேயே, ஆட்சியை, கட்சியை திறம்பட வழி நடத்தியுள்ளார். 
 
மேலும், பன்னீர் செல்வம் படிப்படியாக உழைத்து, தற்போதைய உயரத்திற்கு வந்துள்ளார். கட்சியிலோ, அரசியலிலோ உடனே உயர் பதவிகளை பிடித்துவிட முடியாது. அது ஒன்றும் இன்ஸ்டன்ட் ஃபில்டர் காபியை போன்றதல்ல. அதனை ஓபிஎஸ் போன்ற உழைப்பாளிகள் நன்கு அறிவார்கள் என பன்னீர்செல்வத்தின் விசுவாசம், நேர்மை, உழைப்பு, பணிவு உள்ளிட்டவற்றை பாராட்டி, ஜெயலலிதா பேசினார்.
 
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவே பன்னீர் செல்வத்தின் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்திருந்த போது அவரே ஆட்சிக்கும், கட்சிக்கும் சரியான வழிகாட்டி என்பதனை இந்த வீடியோ வெளிபடுத்துகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்