அவரது மரணம் குறித்த சந்தேகத்தை யாரும் தீர்க்கவில்லை. அப்பல்லோ மருத்துவமனையின் விளக்கமும் திருப்தியாக இருக்கவில்லை. ஆனால் அவரது கூட இருந்த சசிகலா தரப்பில் அவரது மரணத்துக்கான எந்த விளக்கமும் இல்லாமல் முதல்வர் ஆவது எப்படி என்பதில் படு தீவிரமாக உள்ளனர். இது பலருக்கும் அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதில், மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முன்பு, ஜெயலலிதா வீட்டில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. பிரச்னை முடிவில், கீழே விழுந்த ஜெயலலிதாவை தாங்கிபிடிக்க கூட யாரும் இல்லை. இந்த நிலையில் தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பி.எச்.பாண்டியன் கூறியுள்ளார்.