இதனையடுத்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு, லண்டன் மருத்துவர், எயிம்ஸ் மருத்துவ குழு, அப்பல்லோ மருத்துவ குழு, சிங்கப்பூர் பிசியோ தெரபி மருத்துவர்கள் என தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்களின் சிகிச்சைகள் பலனளித்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா வேகமாக குணமாகி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அதிமுக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் அளித்த பேட்டியில், ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் முதல்வர் ஜெயலலிதா தனக்கான உணவை தானே உட்கொள்வதாகவும், மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அவர் ஓய்வெடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.