அவர் தனது வழக்கமான உணவுகளை எடுத்துக் கொள்வதாக, மருத்துவ வட்டாரங்கள் நேற்று கூறின. எனவே, நேற்று மாலை அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் இன்னும் 2 நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்வார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, முதல் அமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு ரத்த பரிசோதனை, ஸ்கேன் என மொத்தம் 12 பரிசோதனைகள் செய்யப்பட்டதாம். அவற்றில் ஒரு சிலவற்றின் முடிவுகள் மட்டுமே மருத்துவர்களுக்கு கிடைத்துள்ளது. மற்ற பரிசோதனையின் முடிவுகள் தெரிய வர 48 மணி நேரம் ஆகும் என்பதால், அவர் அங்கேயே தங்க வேண்டியுள்ளதாம்.