அம்மா உணவகத்தில் ஜெ. படம் அகற்றம் - பின்னணி என்ன?

புதன், 22 பிப்ரவரி 2017 (15:28 IST)
அம்மா உணவகத்தில் இருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் அகற்றப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை கிளப்பியுள்ளது.


 

 
2014ம் ஆண்டு, சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா,தினகரன் ஆகியோருக்கு 4 வருடம் சிறை தண்டனை அளித்து பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்தார். அதை எதிர்த்து, ஜெ.உள்ளிட நான்கு பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். 
 
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, அவர்கள் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
 
இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பளித்தது. அதாவது ஜெ. உள்ளிட அனைவரும் குற்றவாளி என தீர்ப்பளித்தது. ஜெ. மறைந்து விட்டதால், இந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். சசிகலா உள்ளிட்ட 3 பேரும் தற்போது பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
 
எனவே, குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவின் புகைப்படம் அரசு தொடர்பான அலுவலகங்களில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது. 
 
இந்நிலையில், திருச்சியில் உள்ள ஒரு அம்மா உணவகத்தில் ஜெ.வின் படம் சமீபத்தில் திடீரென நீக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்