காவிரி விவகாரம் : உச்சநீதிமன்ற உத்தரவு பற்றி ஜெயலலிதா ஆலோசனை

செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (18:59 IST)
காவிரி விவகாரம் தொடர்பாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அதிகாரிகளுடன் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.


 

 
தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இட்ட உத்தரவை நிறைவேற்றாமல், கர்நாடக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றியுள்ளது.
 
ஆனால் கர்நாடகாகவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், கர்நாடக சட்டபேரவை தீர்மானம் உச்சநீதிமன்றத்தை கட்டுப்படுத்தாது என்று கூறி குட்டு வைத்தது. மேலும், இன்றிலிருந்து மூன்று நாட்களுக்கு 6000 கன அடி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என்று இன்று உத்தரவிட்டது. மேலும், காவிரி விவாகரத்தில் இரு மாநில தலைமை செயலாளர்கள் இடையே பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யும் படி மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது.
 
எனவே, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில், முதலமைச்சர் ஜெயலலிதா தலைமை செயலாளர், அரசு தலைமை வழக்கறிஞர் மற்றும் தமிழக அரசின் ஆலோசகர் ஆகியோருடன் இதுகுறித்து ஆலோசனை நடத்தினார்.
 
மேலும், இரு மாநில அரசுகளுக்கிடையே நடக்கும் பேச்சுவார்த்தையில் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவரோடு தலைமை செயலாளர், பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் ஆகியோரும் அக்கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்