ஓபிஎஸ் இன்றும் ஆஜர்: சசிகலா வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்வார் என தகவல்!

செவ்வாய், 22 மார்ச் 2022 (07:45 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை செய்துவரும் ஆறுமுகசாமி ஆணையம் முன்பு நேரத்தில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் நேற்று ஆஜரான நிலையில் இன்றும் அவர் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இன்று ஆஜராகும் ஓ பன்னீர்செல்வம் அவர்களை  சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று ஓபிஎஸ் அவர்களிடம் 78 கேள்விகள் கேட்கப் பட்டது என்பதும் இந்த கேள்விகளுக்கு பெரும்பாலும் தெரியாது என்ற பதில் தான் ஓபிஎஸ் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தரப்பட்ட மருத்துவ உதவிகள் குறித்த அனைத்தும் சசிகலாவுக்கு மட்டுமே தெரியும் என ஓபிஎஸ் கூறியதை அடுத்து அவரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்