போராட்டம் தொடரும்! ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தொடரும்!

சனி, 21 ஜனவரி 2017 (18:07 IST)
ஜல்லிக்கட்டுக்கான முழுமையான தடை நீங்கும் வரை போராட்டம் தொடரும் என மெரீனாவில் போராடும் இளைஞர்கள் அறிவித்துள்ளனர்.


 

 
ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அவசர சட்டம் அதிகாரப்பூர்வமாக வெளியானது. இதையடுத்து மதுரை ஆட்சியர் ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடத்தப்படும் என்றும் அதை தமிழக முதலவர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைப்பார் என்று அறிவித்தார்.
 
அதன்பிறகு எல்லோரிடமும் பெரிய கேல்வி எழுந்தது. அவசர சட்டம் பிறப்பித்த பிறகு போராட்டம் கலைந்து விடுமோ என்ற கேள்வி எல்லோரிடமும் எழுந்தது. அதற்கான விடையை மெரீனாவில் போராடும் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். 
 
ஜல்லிக்கட்டு போட்டிக்கான முழுமையான தடையை நீக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். எங்களை அவசர சட்டம் கொண்டு வந்து ஏமாற்ற வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்